Wednesday, October 24, 2018

திருக்குறள் -(அதிகாரம் - 1)

1. கடவுள் வாழ்த்து
(அதிகாரம் - 1)
1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
 பகவன் முதற்றே உலகு.
meaning:உலகில் வழங்கி வரும் எழுத்துக்கள் அ என்ற எழுத்தை முதலாகக் கொண்டுள்ளன. அதுபோல உலகத்து உயிர்கள் கடவுளைத் தமக்கு முதன்மையாகக் கொண்டுள்ளன.
2.கற்றதனாலாய பயனென்கொல்வாலறிவன்  
'நற்றாள் தொழாஅர் எனின்.
meaning:கடவுளின் புனிதமான திருவடிகளை வணங்காதவன், கற்ற கல்வியினால் ஒரு பயனும் இல்லை .
3.மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.
meaning:பக்தரின் அகமலரில் வாழ்கின்ற கடவுளின் பெருமை பெற்ற திருவடிகளை நினைப்பவர்கள், உலகில் நெடுங்காலம் நிலைத்து வாழ்வார்கள்.
4.வேண்டுதல்வேண்டாமைஇலான்அடிசேர்ந்தார்க்கு   
 யாண்டும் இடும்பை இல.
meaning:விருப்பும் வெறுப்பும் இல்லாத கடவுளின் திருவடிகளை உறுதியாகப் பற்ற நினைப்பவர்களுக்கு வாழ்வில் எத்தகைய துன்பமும் ஏற்படாது.
5.இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
meaning:கடவுளின் உண்மையான திருவடிகளை விரும்பிப் போற்றுகிறவர்களிடம் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளும் தொடர்வதில்லை.
 
 
Image result for thiruvalluvar

6.பொறிவாயில்ஐந்தவித்தான்பொய்தீர்ஒழுக்க    
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
meaning:ஐம்பொறிகள் வழியாகப் பிறக்கும் வேட்கைகள் இல்லாத கடவுளின் உண்மையான புகழைப் போற்றுபவர்கள் நிலை பெற்று வாழ்வார்கள்.
7.தனக்குவமைஇல்லாதான்தாள்சேர்ந்தார்க் கல்லால் 
 மனக்கவலை மாற்றல் அரிது.
meaning:தனக்கு ஒப்புமை இல்லாத கடவுளின் திருவடிகளைப் பொருதி நினைக்காதவர்களால் மனக்கவலையை மாற்ற முடியாது.
8.அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் 
பிறவாழி நீந்தல் அரிது.
meaning:அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்காதவர் களுக்கு உலக ஆசைகள் என்ற கடல்களைக் கடக்க முடியாது.
9.கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் 
தாளை வணங்காத் தலை.
meaning:கேட்க முடியாத காது, பார்க்க முடியாத கண் போலவே, எட்டுக் குணங்களைக் கொண்ட இறைவனின் திருவடிகளை வணங்காத தலையும் பயனற்றது.
10.பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேராதார். 
meaning:இறைவனின் திருவடிகளை பற்றி நினைப்பவர்கள் பிறவி எனும் பெருங்கடலைக் கடப்பார்கள். மற்றவர்களால் கடக்க முடியாது.
*****************



No comments:

Post a Comment

GRAPHICS KERNEL SYSTEM(GKS),features of GKS,coordinates of GKS,classification of GKS,GKS primitivesGKS inquiry functions

GRAPHICS KERNEL SYSTEM(GKS) GKS is basically a set of procedures which can be called by user programs to carry out certain generalized...